இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பத்ராவதியில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-05-03 18:45 GMT

சிவமொக்கா-

பத்ராவதியில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இளம்பெண் பலாத்காரம்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வந்தார். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் காதலித்து வந்தனர். இளம் பெண்ணை, வாலிபர் பல்வேறு இ்டங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் வாலிபர் இளம்பெண்ணை சிவமொக்காவிற்கு அழைத்து சென்று அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கினார். அப்போது இளம் பெண்ணிடம் ஆசைவார்த்தைகள் கூறி வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என இளம் பெண்ணை மிரட்டி உள்ளார்.

இந்தநிலையில் இளம்பெண் இதுபற்றி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் அவருடைய பெற்றோர் விசாரித்தனர். விசாரணையில் அவர் கதறி அழுதபடி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் இதுபற்றி பத்ராவதி புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

20 ஆண்டு சிறை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. பத்ராவதி புறநகர் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டதால் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்