பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்ராவதி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-07-02 18:45 GMT

சிவமொக்கா-

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்ராவதி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

தொழிலாளி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூரை ேசர்ந்தவர் கணேஷ் (வயது 48). இவரது மனைவி கீதா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணேஷ் சிவமொக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த மே மாதம் 1-ந் தேதி பணிமுடிந்து கணேஷ் வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவர் மதுகுடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணேஷ், கீதாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கீதாவை தலையில் பலமாக கணேஷ் தாக்கினார்.

ரத்த வெள்ளத்தில்...

இதில், அவர் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒலேஒன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பியோடிய கணேசை ஒலேஒன்னூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு பத்ராவதி கோர்ட்டில் நடந்து வந்தது. ஒலேஒன்னூர் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சசிதரா நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.

அதில் பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்