ஊழல் தடுப்பு படை சோதனையில் பெஸ்காம் என்ஜினீயர் வீட்டில் ஒரு கிலோ தங்கம் சிக்கியது

சிவமொக்காவில் பெஸ்காம் என்ஜினீயர் வீட்டில் நடந்த ஊழல் தடுப்பு படை சோதனையில் ஒரு கிலோ தங்கம் சிக்கியது தெரியவந்துள்ளது.;

Update: 2022-06-18 15:30 GMT

சிவமொக்கா;

உழல் தடுப்பு படை

பெங்களூருவில் பெஸ்காமில் என்ஜினீயராக வேலை பார்த்து வருபவர் சித்தப்பா. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டின் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் சித்தப்பாவிற்கு சொந்தமான சிவமொக்கா டவுன் ஆர்.எம்.எல்.நகரில் உள்ள வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

ஒரு கிலோ தங்கம் சிக்கியது

நேற்று இந்த சொத்துகள் தொடர்பான விவரங்களை தாவணகெரே ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் சித்தப்பாவின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ஒரு கிலோ தங்க நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம், சிவமொக்கா நகரில் வாங்கியிருந்த 4 காலிமனை பத்திரம், கோபகொண்டனஹள்ளி கிராமத்தில் வாங்கிய 8 ஏக்கர் பாக்கு தோட்டம், ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சித்தப்பாவிடம் ஊழல் தடுப்பு படையினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்