அக்னிபத் திட்டத்தில், என்.சி.சி. மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு இயக்குனர் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள என்.சி.சி. பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த பெண் அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2022-06-24 22:26 GMT

குவாலியர்,

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள என்.சி.சி. பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த பெண் அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் என்.சி.சி. இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'முப்படைகளில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏ, பி, சி சான்றிதழ்கள் கொண்டிருக்கும் என்.சி.சி. மாணவர்களுக்கு அக்னிபத் திட்டத்தில் போனஸ் புள்ளி வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. இதை என்.சி.சி. அதிகாரிகள் மாணவர்களுக்கு எடுத்துரைத்து அதிக அளவில் அக்னிபத் திட்டத்தில் சேர ஊக்குவிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் என்.சி.சி.யில் இணைவதாக கூறிய அவர், இந்த மாணவர்கள் ராணுவத்தில் சேர்ந்து அக்னிவீரர்களாக உருவானால், சிறந்த குடிமக்களாக மாற முடியும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்