சிவமொக்காவில் துணை வேந்தரை கண்டித்து மாணவர் அமைப்பினர் கோஷம்

சிவமொக்காவில் குவெம்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தரை கண்டித்து மாணவர் அமைப்பினர் கோஷம் எழுப்பினர்.

Update: 2023-07-23 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சங்கரகட்டா பகுதியில் குவெம்பு பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் 33-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.வீரபத்ரப்பாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அப்போது அவர்கள் துணை வேந்தர் ஊழலில் ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். மேலும் அவர்கள் துணை வேந்தருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர்.

ஆனாலும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசி கொண்டே இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துணை வேந்தருக்கு எதிராக கோஷமிட்டவர்களை அங்கிருந்து வெளியே அழைத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

பின்னர், அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இந்திய தேசிய மாணவ அமைப்பை சேர்ந்த 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்