உப்பள்ளியில் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு 3 பேர் கைது

உப்பள்ளியில் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-06 18:45 GMT

உப்பள்ளி-

உப்பள்ளியில் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வியாபாரி வீட்டில் திருட்டு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கசபாபேட்டை எஸ்.எம்.கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மகேஷ். இவர் கசபாபேட்டையில் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் மகேஷ் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தங்கநகைகள், வெள்ளிபொருட்களை திருடிவிட்டு சென்றனர்.

பின்னர் வீடு திரும்பிய மகேஷ் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 130 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வௌ்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

விசாரணை

இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இதுகுறித்து வியாபாரி மகேஷ் கசபாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா மற்றும் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்களையும் கைப்பற்றினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

4 பேர் கைது

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் வியாபாரி வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்களை திருடியதாக உப்பள்ளி ராமலிங்கேஷ்வரா நகரை சேர்ந்த நாகராஜ் துர்கப்பா பாச்சனிக்கி (வயது32), பழைய உப்பள்ளி பகுதியை சேர்ந்த முகமது ரபீக் (28), சுபாஷ் (28), மற்றும் சரஸ்வதி நகரை சேர்ந்த டேவிட் பிரான்சிஸ் (26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்