உப்பள்ளியில்தொழில்அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.26 லட்சம் திருட்டு
உப்பள்ளியில் தொழில்அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.26 லட்சம் திருட்டு சம்பவம் நடந்துள்ளது
உப்பள்ளி
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் தீரஜ். தொழில்அதிபர். இவர் சொந்த வேைல காரணமாக தனது காரில் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளிக்கு வந்ததும் தீரஜ், ஒரு ஓட்டலில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், தீரஜின் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ.26 லட்சத்தை திருடி சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் ஓட்டலில் இருந்து வெளியே வந்த தீரஜ், கார் கண்ணாடி உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் காருக்குள் சோதனை செய்தபோது உள்ளே இருந்த ரூ.26 லட்சம் மாயமாகி இருந்தது. அப்போது தான் மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்து ரூ.26 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தீரஜ், கோகுல்ரோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னா் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கோகுல்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.