உப்பள்ளியில் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் சாய்ந்த பழமையான மரம்
உப்பள்ளியில் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது.;
உப்பள்ளி;
தார்வாரில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றால் ஏராளமான இடங்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. அதுபோல் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் ரெயில் நிலைய ரோட்டில் சவ்தாக்கார் நகரில் பழமையான மரம் ஒன்று இருந்தது.
அந்த மரம் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்த உப்பள்ளி டவுன் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் வந்த மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரம் கொண்டு அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.