சாகரில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்

சாகரில் கரடி தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.;

Update: 2023-05-02 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஹென்னி ஜாடகல் கிராமத்தை சேர்ந்தவர் திம்மநாயக் (வயது 72). இவருக்கு சொந்தாமான பாக்கு தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பாக்கு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடியை பார்த்து திம்மநாயக் தப்பி செல்ல முயன்றார். ஆனாலும் அதற்குள் கரடி அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் திம்மநாயக் கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம் கட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்த கரடியை விரட்டியடித்தனர்.

கரடி தாக்கியதில் திம்மநாயக் பலத்த காயம் அடைந்திருந்தார். இதையடுத்து விவசாயிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால், கரடி அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்