புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 82 ஆக உயர்வு.!
புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 82 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,
இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியிலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த யூனியன் பிரதேச அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 82 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 11 ஆக இருந்த பாதிப்பு இன்று 82 ஆக அதிகரித்துள்ளது. இதனால், புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் 55 பேர், காரைக்காலில் 23 பேர், ஏனாம் மற்றும் மாகில் தலா2 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.