நஞ்சன்கூடுவில் கிராம தங்கல் நிகழ்ச்சியில் மக்களிடம் குறைகள் கேட்ட கலெக்டர்

நஞ்சன்கூடுவில் நடந்த கிராம தங்கல் நிகழ்ச்சியில் மக்களிடம் குறைகளை கலெக்டர் பகாதி கவுதம் கேட்டுகொண்டனர்.

Update: 2022-10-16 19:00 GMT

மைசூரு;


மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வெங்கடகிரி காலனியில் நேற்றுமுன்தினம் கலெக்டரின் கிராம தங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பகாதி கவுதம் கலந்துகொண்டார். அப்போது சுற்றுவட்டார கிராமங்களின் மக்கள் கலந்துகொண்டு கலெக்டர் பகாதி கவுதமிடம் தங்களது குறைகளை தெரிவித்து மனுக்கள் கொடுத்தனர்.

அதன்படி பொதுமக்கள், கலெக்டர் பகாதி கவுதமிடம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு, நிலத்திற்கு பட்டா வழங்குவது, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு குறைகளை தெரிவித்தனர். இதை கேட்டறிந்த கலெக்டர் உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சில பிரச்சினைகளை உடனே தீர்த்து வைத்தார்.

இதையடுத்து வனத்துறை அதிகாரி கரிகாலன், பொதுமக்களிடம் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுப்பது குறித்து எடுத்துரைத்தார். கலெக்டரின் கிராம தங்கல் நிகழ்ச்சியில் நஞ்சன்கூடு தாசில்தார் உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்