மைசூருவில் மந்திரி எச்.சி. மகாதேவப்பா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
மைசூருவில் மந்திரி எச்.சி.மகாதேவப்பா தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மைசூரு-
மைசூருவில் மந்திரி எச்.சி.மகாதேவப்பா தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
மைசூருவில் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ஹரிஷ் கவுடா, ஸ்ரீவத்ஷா, தன்வீர்சேட், மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத், மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் பாத்தோடு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா ெலட்கர், மைசூரு மாநகராட்சி கமிஷனர் லட்சுமிகாந்த் ரெட்டி உள்பட அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது மந்திரி எச்.சி. மகாதேவப்பா பேசுகையில்,
மாவட்டத்தில் அனைத்து கிராமங்களும் குடிநீர் சீரான முறையில் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினை தொடர்பாக யார் தொடர்பு கொண்டாலும் உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவ ஊழியர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆஸ்பத்திரிகளின் வளாகத்தை சுத்தமாக வைக்க வேண்டும்.
உற்சவ தேரோட்டம்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட கூடாது. தேவையான மருந்து, மாத்திரைகள் ஆஸ்பத்திரிகளில் இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுக்கும் உரங்களை அதிகாரிகள் பதுக்கி வைக்க கூடாது. அரசு அலுவலங்களுக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது. அவர்கள் கொடுக்கும் புகாரை அதிகாரிகள் உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி சாமுண்டீஸ்வரி கோவிலில் வரதன்தி உற்சவ தேரோட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும், என்றார்.