குடகில் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை

குடகில் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-10-17 19:00 GMT

குடகு;


குடகு மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வனத்துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் தரப்பில் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்து தெரிவித்ததாவது:-

காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் கிராமங்களுக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனவிலங்குகள், மனிதர்கள் மற்றும் கால்நடைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காடுகள் அழிக்கப்படுவது தடுப்பதுடன், வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் தடுப்பணைகள் அமைத்து நீர் நிலைகளை பாதுகாக்கவேண்டும். மழையால் பாதிக்கப்படட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்