கத்லேபைலு கிராமத்தில் வயலுக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்

கத்லேபைலு கிராமத்தில் வயலுக்குள் புகுந்து காட்டுயானை நெற்பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் கிராம மக்கள் பீதி உள்ளனர்.

Update: 2022-10-31 19:00 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா கத்லேபைலு கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் இரைதேடி காட்டுயானை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வழக்கமாக நடந்து வருகிறது.

மேலும் அவை அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்தும் நாசப்படுத்தி வருகிறது. இதேபோல் அந்த கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி வயல் உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காட்டுயானை ஒன்று இரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி உள்ளது.

அந்த ஒற்றை காட்டுயானை ரமேசின் வயலுக்குள் நுழைந்துள்ளது. அது அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்களை காலால் மிதித்து நாசப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடு்த்தார்.

தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். காட்டுயானை நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்