கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைய மக்கள் வாய்ப்பு தரக்கூடாது சித்தராமையா வேண்டுகோள்

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைய மக்கள் வாய்ப்பு தந்துவிடக் கூடாது என்று சித்தரமையா கூறினார்.

Update: 2023-05-06 18:45 GMT

மைசூரு-

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைய மக்கள் வாய்ப்பு தந்துவிடக் கூடாது என்று சித்தரமையா கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா

மைசூரு மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்தவர் சங்கரலிங்கேகவுடா. இவர் பா.ஜனதாவைச் சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது மகன் நந்தீஸ் பிரீதம் பா.ஜனதாவில் பணியாற்றி வந்தார். ஆனால் அவருக்கு அக்கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.

மைசூருவில் உள்ள பத்திரிகையாளர்கள் பவனில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா முன்னிலையில் நந்தீஸ் பிரீதம் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

கூட்டணி ஆட்சி

தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் இம்மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே முக்கியமான தேர்தல். பா.ஜனதா அரசு, மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்து வருகிறது. மக்கள் அதிலிருந்து விடுபட காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மேலும் தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும். அதிலிருந்து மக்கள் பின்வாங்கிவிட கூடாது. கூட்டணி ஆட்சி அமைவது போன்ற வாய்ப்பை மக்கள் தந்துவிட வேண்டாம்.

கூட்டணி அமைத்து ஆட்சிபுரிந்து அதனால் ஏற்பட்ட விளைவுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மக்களுக்கு நல்ல ஆட்சி, நலத்திட்டங்களை செய்திட பலமான ஆட்சி அமைவது அவசியம். கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதாவினர் செய்த முறைகேடுகளால் மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் முஸ்லிம் இளைஞர்கள் கொலையாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் வியாபாரம் செய்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.

பொய்யான வாக்குறுதிகள்

காங்கிரஸ் ஆட்சியில் 165 வாக்குறுதிகளை 158 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். பா.ஜனதாவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்