இந்தியாவில் இன்று சற்று குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு...!

கொரோனாவில் இருந்து ஒரேநாளில் 1,800 பேர் குணமடைந்த நிலையில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

Update: 2023-04-03 06:30 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,824 பதிவான நிலையில், இன்று 3,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,47,22,605 லிருந்து 4,47,26,246 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,389 லிருந்து 20,219 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனாவில் இருந்து ஒரேநாளில் 1,800 பேர் குணமடைந்த நிலையில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,892 ஆக உள்ளது.இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,75,135 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 220,66,11,814 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,799 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்