இமாச்சல பிரதேசத்தில் மலையிலிருந்து உருண்ட பாறாங்கல் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் மலையிலிருந்து உருண்ட பாறாங்கல் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-07-21 11:15 GMT

சிம்லா,

இமாச்சல பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் உள்ள கபால் கிராமத்தில் கார் விபத்து நடந்துள்ளது. நேற்று இரவு டென்வாரி பகுதியிலிருந்து கபால் கிராமத்திற்கு ஒரு காரில் 5 பேர் சென்று உள்ளனர். கபாலுக்கு அருகில் செல்லும் போது மலையிலிருந்து உருண்ட ஒரு பாறாங்கல் மீது கார் மோதியது. அதில் கார் பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்த இருவரை மீட்டு சந்தாசுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகச் சிம்லா காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் காந்தி தெரிவித்தார்."கார் மலையிலிருந்து உருண்ட ஒரு பாறாங்கல்லில் மோதியது. அதில் போல்ட் டாங்க் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கார் விழுந்து விபத்துக்குள்ளானது" என்று சஞ்சீவ் காந்தி கூறினார்.

இமாச்சல பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் அதிகபட்சமாக 11 பேர் சிம்லாவிலும், ஒன்பது பேர் மண்டியிலும், தலா ஏழு பேர் குலு மற்றும் சோலனிலும் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்