சிவமொக்கா மாநகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
சிவமொக்கா மாநகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சிவமொக்கா;
சிவமொக்கா டவுன் ஏ.ஏ. சதுக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சிட்டி சென்டர் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஏராளமான வியாபாரிகள் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
ஆனால் இதில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குத்தகை விவரத்தை மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கும்படி கோரி மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மேயருக்கு எதிராகவும், மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்தும் கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் உடனடியாக அந்த வணிக வளாக கடைகளின் குத்தகை விவரத்தை மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கும்படி கோஷமிட்டனர்.