சிக்கமகளூருவில், தீபாவளியையொட்டி பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்

சிக்கமகளூருவில், தீபாவளியையொட்டி பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-07 15:15 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சிக்கமகளூரு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஏராளமானோர் பட்டாசு கடைகளை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

இந்த ஆண்டும் சிக்கமகளூரு மாவட்டத்தில் பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சிக்கமகளூரு டவுனில் கல்யாண் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

அங்கு பட்டாசு கடைகள் அமைக்க விரும்பும் வியாபாரிகள் நகரசபையில் அனுமதி சான்றிதழ் பெற்று, சம்பந்தப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். அரசு விதிக்கும் விதிமுறைகளை பின்பற்றி வியாபாரிகள் பட்டாசு கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்