சிக்கமகளூரு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து; 2 பேர் பலி
சிக்கமகளூரு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.;
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவடடம் அஜ்ஜாம்புரா தாலுகா பேகூர் தாண்டிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாலாநாயக் (வயது 40). இவர் நேற்றுமுன்தினம் வேலை விஷயமாக அஜ்ஜாம்புராவுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அஜ்ஜாம்புரா-தரிெகரே சாலையில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் ஹாலாநாயக்கின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. பின்னர் சாலையோரம் சரிந்து விழுந்தது. இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா குப்பாலு கிராம பகுதியில் உள்ள சாலையில் சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவை சேர்ந்த சுக்கில் (வயது 35) என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே சாலையில் எதிரே வந்த பஸ்சும், சுக்கில் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் சுக்கில் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த கடூா் போலீசார் சுக்கிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.