கொள்ளை வழக்கில் 4 பேர் கைது

கொள்ளை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-11-07 18:45 GMT

பெங்களூரு: மடிவாளா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் மங்கமனபாளையாவை சேர்ந்த முகமது பைசல் (வயது 26), சபீர்அகமது (27), பர்கத் (25), துபேல் (23) என்று தெரிந்தது. இவர்கள் 4 பேரும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வலம் வருவார்கள். அப்போது தனியாக செல்லும் நபர்களை மிரட்டி பணம், செல்போன்களை கொள்ளையடிப்பதை தொழிலாக வைத்திருந்தார்கள். கைதான 4 பேரும் கொடுத்த தகவல்களின் பேரில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மீட்கப்பட்டு உள்ளது. கைதான 4 பேர் மீதும் மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்