பெங்களூருவில், ஆன்லைன் உணவுகளின் விலை அதிகரித்துவிட்டதா?; பொதுமக்கள் கருத்து

பெங்களூருவில் ஆன்லைன் உணவுகளின் விலை அதிகரித்துவிட்டதாக பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர்.

Update: 2022-10-16 21:21 GMT

பெங்களூரு:

பிடித்த உணவுகள்

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் அன்றாட வேலைகளை மிகவும் எளிதாக்கிவிட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலானவர்கள் குடிநீர் கட்டணம், மின் கட்டணம், சொத்துவரி செலுத்தவும், வங்கியில் பணம் போடவும், எடுக்கவும் மணிக்கணக்கில் வரிசையில் நின்றோம்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஸ்மார்ட் போன் அனைவரின் கைகளிலும் தவழ தொடங்கியதில் இருந்து அனைத்து பணிகளையும் அதன் வழியாக செய்து கொள்கிறோம். நமது கையில் ஸ்மார்ட் போன் இருப்பது, உள்ளங்கையில் உலகம் இருப்பது போல் தோன்றுகிறது. எந்த தகவலாக இருந்தாலும், உடனே கூகுள் தேடுதலில் போய் தேடி பிடித்து எடுத்து கொள்கிறோம்.

தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி காரணமாக செல்போனை மையமாக வைத்து பல்வேறு தொழில்களை உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்கிறார்கள். உதாரணத்திற்கு பெங்களூருவில் சொமோட்டா, சுவிக்கி போன்ற உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் ஸ்மார்ட் செல்போன்களில் செயலி அடிப்படையில் இயங்குகின்றன. அவற்றில் சுமார்

5 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். நாம் செல்போனில் அந்த நிறுவனங்களின் செயலிக்குள் சென்றுவிட்டால், அனைத்து ஓட்டல்களின் உணவுகளின் விவரங்களும் உள்ளன. அதில் நமக்கு எந்த உணவகம் பிடிக்குமோ அதில் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்திவிட்டால், அந்த உணவு அடுத்த 30 நிமிடங்களுக்குள் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து சேரும்.

வாடகையை உயர்த்திவிட்டன

உணவுக்காக நாம் நமது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு உணவகத்திற்கு சென்று அலைய வேண்டியது இல்லை. தொடக்கத்தில் அந்த நிறுவனங்களின் உணவு வகைகளின் விலை ஓரளவுக்கு நியாயமான முறையில் தான் இருந்தது. நாட்கள் செல்ல, செல்ல சேவை கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்களை உள்ளடக்கி வசூலிக்கிறார்கள். இதனால் அந்த நிறுவனங்களில் ஆர்டர் செய்யும் உணவு வகைகளின் விலை அதிகரித்துவிட்டதாக பொதுமக்கள் குறிப்பாக ஆன்லைனில் அடிக்கடி உணவு ஆர்டர் செய்து வாங்குகிறவர்கள் புலம்புகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த ஆன்லைன் உணவு வினியோக நிறுவனங்கள் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தன. அதேபோல் ஓலா, ஊபர் கார் வாடகை நிறுவனங்களும் வாடகையை உயர்த்திவிட்டன. போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தாலோ அல்லது மழை பெய்யும்போதோ வாடகையை அதிகமாக உயர்த்தி விடுகிறார்கள். இதனால் அவற்றை நம்பி பயணம் செய்கிறவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்