ஆந்திராவில் கிணற்றிலிருந்து 10 அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்த தீ..! மக்கள் அச்சம்

ஆந்திராவில் கிணற்றிலிருந்து 10 அடி உயரத்திற்கு பீய்ச்சியடிக்கப்பட்ட தீயை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2023-07-16 06:07 GMT

திருமலை,

ஆந்திராவில் கிணற்றிலிருந்து 10 அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்த தீயை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருமலை, ஆந்திர-மாநிலம், அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் ராஜோலு மண்டலம் சிவகோடு பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. அதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக உரிமையாளர் மோட்டாரை ஆன் செய்தார். அப்போது, 30 அடி வரை தண்ணீரும், 10 அடி உயரத்திற்கு தீயும் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பயந்துபோன  உரிமையாளர்  தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு ஆய்வு செய்ததில் 250 அடியில் அமைக்கப்பட்ட இந்த ஆழ்துளை கிணற்றில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தி கைவிடப்பட்ட கியாஸ் பைப் லைன் இருப்பது தெரியவந்தது. இதில் இருந்து வெளியேறிய கியாஸ் தீயை வெளியேற்றியதாக கூறினர் . இதையடுத்து மண்ணை நிரப்பி ஆழ்துளை கிணற்றை மூடினர். கிணற்றிலிருந்து தீ வந்த இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்