திருமணமான 7மாதத்தில்புதுபெண் மர்ம சாவு

திருமணமான 7மாதத்தில் புதுபெண் மர்ம முறையில் இறந்தார்.

Update: 2023-03-27 05:15 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா யடேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 21). அதேப்பகுதியை சேர்ந்தவர் அனிதா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இதற்கு அனிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதையும் மீறி சந்தோஷ், அனிதா காதலித்து வந்தனர். இந்தநிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ், பெண்ணின் தந்தை மாணிக்கப்பாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

அதில் அவர் உங்கள் மகள் உடல்நிலை சரியில்லாமல் சிவமொக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என கூறினார். உடனே மாணிக்கப்பா தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அனிதா இறந்து விட்டதாக டாக்டர், மாணிக்கப்பாவிடம் கூறினார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்தநிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணிக்கப்பா ஒளேஒன்னூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள சந்தோஷ் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்