ஒரே ஆண்டில் 34 புலிகள் மரணம்; 'புலிகள் மாநிலம்' என்ற அந்தஸ்தை இழக்கிறது, மத்தியபிரதேசம்; கர்நாடகா முன்னிலை

புலிகள் மாநிலம் என்ற அந்தஸ்தை மத்தியபிரதேசம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அதை கைப்பற்றுகிறது.

Update: 2023-01-08 21:17 GMT

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், 4 ஆண்டுகளுக்கு ஒருதடவை நாடு முழுவதும் புலிகளை கணக்கெடுத்து வருகிறது. அந்த கணக்கெடுப்பு கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்டது.அதில், புலிகள் அதிகமாக உள்ள மத்தியபிரதேசத்தில் 34 புலிகள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. புலிகள் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் உள்ள கர்நாடகாவில் 15 புலிகள் இறந்துள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மத்தியபிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும் இருந்தன. சிறிய வித்தியாசத்தில், நாட்டின் 'புலிகள் மாநிலம்' என்ற அந்தஸ்தை மத்தியபிரதேசம் தக்க வைத்துக்கொண்டது.

ஆனால், கர்நாடகாவை விட இருமடங்குக்கு அதிகமான புலிகள் இறந்திருப்பதால், புலிகள் மாநிலம் என்ற அந்தஸ்தை மத்தியபிரதேசம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அதை கைப்பற்றுகிறது. மத்தியபிரதேசத்தில் அதிகமான புலிகள் இறந்திருப்பது மர்மமாக இருப்பதாக அம்மாநில வனத்துறை கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்