குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.;

Update: 2022-06-19 16:39 GMT

தார்வார்: தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பியாஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாருதி பாரகேர்(வயது 12) மற்றும் ஹஞ்சினமணி(7). இவர்கள் இருவரும் நேற்று காலையில் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை குட்டையில் நீச்சல் பழக சென்றனர். அப்போது இருவரும் பண்ணை குட்டையில் இறங்கி நீச்சல் பழகி கொண்டிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.


இதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஓடி வந்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சிறுவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். பின்னர் இச்சம்பவம் குறித்து உப்பள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து பண்ணைக்குட்டையில் இருந்து சிறுவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்