இந்தியாவை 'வெளிச்சமான இடத்தில்' ஐஎம்எப் வைத்துள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-01-11 11:19 GMT

டெல்லி,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்களின் 7வது மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடரங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் மோடி, உலக பொருளாதாரத்தில் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவை 'வெளிச்சமான இடத்தில்' (bright spot) வைத்துள்ளது. உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வலிமையான மெக்ரோ பொருளாதார அடிப்படைகளே இதற்கு காரணம். கடந்த 8 ஆண்டுகளில் முதலீட்டிற்கான வழிமுறைகளை துரிதப்படுத்தி, பல்வேறு தடைகளை இந்த அரசு நீக்கியுள்ளது. மிகவும் முக்கியமான பாதுகாப்பு, சுரங்கம், விண்வெளி துறைகளில் தனியாருக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளோம்' ஏன்றார் 

Tags:    

மேலும் செய்திகள்