'லிங்காயத்தினரின் வாக்கு பா.ஜ.க.வுக்கு தேவையில்லை என்று நான் கூறவில்லை' முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

லிங்காயத் சமுதாயத்தினரின் வாக்கு பா.ஜனதாவுக்கு தேவையில்லை என்று நான் எங்கும் கூறவில்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2023-05-06 18:45 GMT

உப்பள்ளி-

வாக்காளர்களின் கவனத்தை சிலர் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள், லிங்காயத் சமுதாயத்தினரின் வாக்கு பா.ஜனதாவுக்கு தேவையில்லை என்று நான் எங்கும் கூறவில்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

கொலை மிரட்டல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் மல்லிகார்ஜுன கார்கே. இவருக்கு பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பற்றி எனது கவனத்துக்கும் வந்துள்ளது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

திசை திருப்ப முயற்சி

இதுபோன்ற விஷயங்களை வளர விடக்கூடாது. லிங்காயத் சமுதாயத்தினரின் வாக்கு பா.ஜனதாவுக்கு தேவையில்லை என்று நான் கூறியதாக சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். நான் அவ்வாறு எங்கும் கூறவில்லை. வாக்காளர்களின் கவனத்தை திசை திருப்ப சிலர் முயற்சி செய்கிறார்கள். அது சரியல்ல. அப்படி நான் எங்கும் கூறி பிரசாரம் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்