பெங்களூருவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 8 பேர் சிக்கினர்
பெங்களூருவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 8 பேர் சிக்கினர்
பெங்களூரு: பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டினர் வசிக்கும் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினாா்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினாா்கள். இந்த சோதனையின் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆப்பிரிக்காவை சேர்ந்த 8 பேர் போலீசாரிடம் சிக்கினாா்கள்.
அவர்களில் ஒருவர் சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். மற்ற 7 பேரும் சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்ததால், அவர்களை வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டு வரும் மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.