சட்டவிரோத மணல் கடத்தல்; 4 பேர் சிக்கினர்

சட்டவிரோத மணல் கடத்திய 4 பேர் சிக்கினர்

Update: 2022-09-13 15:45 GMT

மங்களூரு் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சோமேஷ்வர் மூடா பகுதியில் உள்ள கடற்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா மற்றும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல், கண்காணிப்பு கேமரா, வேலியை சேதப்படுத்திவிட்டு டிப்பர் லாரியில் மணல் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தல் கும்பலை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மத்யார் சாய்நகரை சேர்ந்த சூரஜ், முடிப்பு மத்யநாட்காவை சேர்ந்த இக்பால், தளபாடியை சேர்ந்த அகில் மற்றும் சோமேஷ்வர் மூடாவை சேர்ந்த பிரஜ்வல் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்