கணவரை குளியலறையில் வைத்து பூட்டிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய புதுப்பெண்

திருமணமான 2 மாதத்தில் கணவரை குளியலறையில் வைத்து பூட்டிவிட்டு கள்ளக்காதலனுடன் புதுப்பெண் ஓடிவிட்டார்.

Update: 2023-08-19 18:45 GMT

ஆர்.ஆர்.நகர்:

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் (ஆர்.ஆர்.நகர்) பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இருவரும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் ரமேசின் மனைவிக்கும், அந்தப்பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி காலையில், ரமேஷ் வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிப்பதற்கு சென்றார். அந்த சமயத்தில் ரமேசை குளியலறைக்குள் வைத்து அவரது மனைவி பூட்டினார். பின்னர் தனது கள்ளக்காதலன் கார்த்திக்குடன் அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதற்கிடையே குளியலறை கதவு பூட்டப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்தார். அப்போது தான், மனைவி தன்னை குளியலறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கள்ளக்காதலன் கார்த்திக்குடன் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ராஜராஜேஸ்வரி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்