தீங்கான கண்ணோட்டத்துடன் யாரும் நம்மை பார்த்தால் ராணுவ வீரர்கள் தக்க பதிலடி தருவார்கள்: பிரதமர் மோடி உரை

இலங்கை அல்லது குருஷேத்ர போர் ஆகட்டும், கடைசி வரை நாம் போரை தள்ளிபோடவே முயற்சி செய்தோம் என பிரதமர் மோடி தனது உரையின்போது குறிப்பிட்டார்.

Update: 2022-10-24 09:02 GMT



லடாக்,

பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வழக்கம் கொண்டுள்ளார். இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை வீரர்களுடன் கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி கார்கில் புறப்பட்டு சென்றார்.

கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். அவர், ராணுவ வீரர்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் பாடலை பாடினார்.

இதன்பின்பு வீரர்கள் முன் அவர் உரையாற்றியபோது, போரை ஒருபோதும் முதல் வாய்ப்பாக நாம் பார்த்ததில்லை. இலங்கையில் நடந்த போராகட்டும் அல்லது குருஷேத்ர போர் ஆகட்டும்.

போரை தள்ளிபோடவே கடைசி வரை நாம் முயற்சி மேற்கொண்டோம். நாம் போருக்கு எதிரானவர்கள். ஆனால், வலிமை இல்லாமல் அமைதி என்பது இருக்காது. யாரேனும் நம்மை தீங்கான கண்ணோட்டத்துடன் பார்த்தால் ராணுவ வீரர்கள் தக்க பதிலடி தருவார்கள் என பேசியுள்ளார்.

400 வகையான பாதுகாப்பு சாதனங்களை இறக்குமதி செய்ய கூடாது. அதற்கு பதிலாக இந்தியாவிலேயே அவற்றை கட்டமைக்க வேண்டும் என்ற 3 ஆயுத படைகளின் முடிவை நான் பாராட்டுகிறேன்.

உள்நாட்டில் தயாரான மேட் இன் இந்தியா ஆயுதங்களை நமது வீரர்கள் பயன்படுத்தி போரிடும்போது, அவர்கள் பெருமைப்படுவது மட்டுமின்றி எதிரிகளை வீழ்த்துவதற்கு ஆச்சரியம் நிறைந்த ஒரு கருவியை வைத்திருப்பார்கள் என பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்