நடிகர் சுதீப் இணைந்தால் பா.ஜனதாவுக்கு பலம்; மந்திரி ஸ்ரீராமுலு பதில்

நடிகர் சுதீப் இணைந்தால் பா.ஜனதாவுக்கு பலம்என்று மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்து உள்ளார்.

Update: 2023-04-05 18:45 GMT

பெங்களூரு:

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், நேற்று மதியம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசினார். இதனால் நடிகர் சுதீப், பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையில் அவர் பா.ஜனதாவில் இணைய உள்ளதாகவும், அவரை வரவேற்க பா.ஜனதா தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து நடிகர் சுதீப் தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இதுகுறித்து பெங்களூருவில் போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களிடம் கூறுகையில், 'நடிகர் சுதீப் மிகப்பெரிய நடிகர். அவருக்கு என்று தனியாக ரசிகர்கள் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருந்தார். நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம். சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக நடிகர் சுதீப் அறிவித்திருக்கிறார். என்றாலும், நடிகர் சுதீப் பா.ஜனதாவில் இணைந்தால், சட்ட்சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பலம் கிடைக்கும். இந்த விவகாரத்தில் நடிகர் சுதீப் எடுக்கும் முடிவே இறுதியானது. பா.ஜனதாவில் இணையும்படி அவருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்