ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
2.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் எனப்படும் சி.ஐ.எஸ்.சி.இ. அமைப்பு, கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 29-ந்தேதி வரை ஐ.சி.எஸ்.இ. படிப்புக்கான இறுதி தேர்வை நடத்தியது.
தொடர்ந்து ஐ.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகள் பிப்ரவரி 13-ந்தேதி தொடங்கி மார்ச் 31-ந்தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளில் மொத்தம் 2.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதற்கான முடிவுகளை cisce.org and result.cisce.org என்ற வலைதளத்திற்கு சென்று மாணவ மாணவியர்கள் அறிந்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் தங்களது ஐ.டி. எண் மற்றும் குறியீட்டு எண்ணை (இன்டெக்ஸ்) கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.