சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராகிறேன்-டி.கே.சிவக்குமார் பேட்டி

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராகிறேன் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-28 21:17 GMT

ராமநகர்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-வழக்குகளில் சிக்க வைக்க சோனியா காந்தி, ராகுல் காந்தியையே விடவில்லை. என்னை விடுவார்களா?. வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது. இதில் ஆஜராக நான் நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். என்னை சிக்கவைக்க பலர் முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதா அரசு ஜனோத்சவா நடத்த தேவை இல்லை என்று நான் ஏற்கனவே கூறினேன். அதை ரத்து செய்துள்ளனர். இதை பாராட்டுகிறேன்.

தட்சிண கன்னடாவில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கிறேன். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, இளைஞர்கள் கொல்லப்படக்கூடாது. பா.ஜனதா தொண்டர்களின் வேதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். இந்த சம்பவத்தில் யாரும் அரசியல் செய்ய கூடாது. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். டி.ேக.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதுதொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்