பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை ஏற்க மறுத்தேன்: நிதின் கட்காரி பேச்சு

நான் எந்தவொரு பதவிக்காகவும் சமரசம் செய்து கொள்வதில்லை என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

Update: 2024-09-14 23:29 GMT


நாக்பூர்,


மராட்டியத்தின் நாக்பூர் நகரில நடந்த பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, சம்பவம் ஒன்றை நான் நினைவுகூர்கிறேன். யாருடைய பெயரையும் கூற போவதில்லை. அந்நபர் என்னிடம், நீங்கள் பிரதமராக போகிறீர்கள் என்றால் உங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றார்.

ஆனால், நீங்கள் ஏன் எனக்கு ஆதரவு தர வேண்டும் என நான் கேட்டேன். உங்களுடைய ஆதரவை நான் ஏன் பெற வேண்டும். என்னுடைய வாழ்வில் பிரதமராவது என்பது என்னுடைய நோக்கம் இல்லை. என்னுடைய மனஉறுதி மற்றும் என்னுடைய அமைப்புக்கு நான் விசுவாசத்துடன் இருக்கிறேன்.

எந்தவொரு பதவிக்காகவும் நான் சமரசம் செய்து கொள்ள போவதில்லை. ஏனெனில், என்னுடைய மனவுறுதியே எனக்கு முக்கியம் என்று கூறினேன் என்று பேசியுள்ளார். இந்த பேச்சின்போது, பத்திரிகை துறை மற்றும் அரசியல் என இரண்டிலும் நீதிநெறி கோட்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்து காட்டி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்