'மடாதிபதி தற்கொலை செய்வார் என்று நினைக்கவில்லை'

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டதான் நினைத்தோம். ஆனால் மடாதிபதி தற்கொலை செய்து கொள்வார் என்பதை நினைக்கவில்லை என்று கைதானவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-05 21:08 GMT

பெங்களூரு:-

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள பண்டே மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை கொண்டார். இந்த வழக்கில் மடாதிபதியின் சகோதரரும், கண்ணூர் மடத்தின் மடாதிபதியுமான மிருதனஞ்ஜெய சுவாமி, நீலாம்பிகா, மகாதேவய்யா ஆகிய 3 பேரை மாகடி போலீசார் கைது செய்தனர். அவர்களை 6 நாட்கள் தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 3 பேரின் போலீஸ் காவலும் நேற்று நிறைவு பெற்றது.

இதனால் 3 பேரையும் மாகடி 1-வது ஜே.எம்.எப்.சி. கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து 3 பேரையும் வருகிற 15-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவு எதிரொலியாக மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையிலும், நீலாம்பிகா பெங்களூரு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையின் போது கைதான 3 பேரும் மடாதிபதியை மிரட்டி பணம் பறிக்கவும், அவரது மரியாதையை கெடுக்கவும் தான் வீடியோ எடுத்தோம் என்றும், அவர் தற்கொலை செய்து கொள்வார் என்று நினைக்கவில்லை என்றும் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்