'என்னால் நம்ப முடியவில்லை' - ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு பேட்டி

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது

Update: 2022-06-22 03:30 GMT

Image Courtesy : PTI 

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, திரௌபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பின் திரௌபதி முர்மு அளித்த பேட்டியில், "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, என்னால் நம்ப முடியவில்லை. இந்த கட்டத்தில், அதிகம் பேச விரும்பவில்லை நன்றியுள்ளவளாக இருக்க கடமைப்பட்டுள்ளேன்.அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு என்ன அதிகாரங்கள் இருந்தாலும், நான் அதற்கேற்ப செயல்படுவேன். என அவர் கூறினார் .

Tags:    

மேலும் செய்திகள்