"நான் குற்றவாளி அல்ல" - சிங்கப்பூர் செல்ல அனுமதி கிடைக்காதது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதங்கம்

சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார்.

Update: 2022-07-18 11:34 GMT

Image Courtesy : ANI  

புதுடெல்லி,

'டெல்லி மாடல்' எனப்படும் டெல்லியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பற்றி சிங்கப்பூர் உலக நகரங்கள் மாநாட்டில் விவரிக்கவும் பங்கேற்கவும் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதில் பங்கேற்க சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி மத்திய அரசுக்கு டெல்லி முதல்-மந்திரிஅரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த அனுமதியும் வரவில்லை எனத் தெரிகிறது. இதனால் பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி கடிதம் எழுதினார். அதில், ஒரு மாதத்திற்கும் மேலாக மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் இன்று இது குறித்து பேசிய கெஜ்ரிவால் கூறுகையில், "நான் குற்றவாளி அல்ல, நான் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் நான் நாட்டின் சுதந்திர குடிமகன். நான் ஏன் நிறுத்தப்படுகிறேன்? . சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்காததற்கு பின்னணியில், அரசியல் இருக்கிறது." என தெரிவித்துள்ளார்.

இந்த உச்சி மாநாடு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்