வேறு சாதி பெண்ணை திருமணம் செய்த இளைஞர் குத்திக்கொலை! 4 பேர் கைது

இந்த கொலையில் பெண்ணின் குடும்பத்தினருக்கு பங்கு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.;

Update: 2022-05-21 11:21 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக, ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

ஐதராபாத்தில் தனது சாதியை விட்டு வேறு சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை நீரஜ் பன்வார்(21 வயது) என்ற இளைஞர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நேற்று அவர் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பலமுறை கத்தியால் குத்தப்பட்ட அந்த 21 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர், அவர்கள் கர்நாடக எல்லையில் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார்.

இறந்த நீரஜ் பன்வார் தம்பதிக்கு இரண்டரை மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த கொலையில் பெண்ணின் குடும்பத்தினருக்கு பங்கு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒரு மாதத்திற்குள் ஐதராபாத்தில் நடந்த இரண்டாவது ஆணவக் கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்