ஐதராபாத்; ரூ.468 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அழித்த சுங்க அதிகாரிகள்

தெலுங்கானாவில் ஐதராபாத் சுங்க அதிகாரிகள் ரூ.468 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அழித்துள்ளனர்.

Update: 2023-10-10 19:25 GMT

ஐதராபாத்,

தெலுங்கானாவில் ஐதராபாத் நகர சுங்க துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் இணைந்து பல்வேறு தருணங்களில் போதை பொருட்களை பறிமுதல் செய்யும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், 27.9 கிலோ எடை கொண்ட ரூ.195.37 கோடி மதிப்பிலான ஹெராயின், ரூ.272.55 கோடி மதிப்பிலான மெபிடிரோன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து, மொத்தம் 216.69 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (செவ்வாய் கிழமை) அழிக்கப்பட்டு உள்ளன.

நைஜீரிய, பெனியனாய்ஸ், தான்சானியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பயணிகளிடம் இருந்து இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றை தெலுங்கானாவின் மேச்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தின் தண்டிகல் கிராமத்தில் உள்ள ஐதராபாத் கழிவு மேலாண்மை திட்ட வசதி கொண்ட இடத்தில் வைத்து அழித்தனர்.

இவற்றின் மதிப்பு ரூ.468.02 கோடி ஆகும். இவை தவிர, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் ஐதராபாத் சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த 40 லட்சம் கடத்தல் சிகரெட்டு குச்சிகளும் அழிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்