ஒரே ஐகோர்ட்டில் நீதிபதிகளாக பணியாற்றும் கணவன்-மனைவி - ராஜஸ்தானில் முதல் முறை நிகழ்வு

ராஜஸ்தானில் ஒரே ஐகோர்ட்டில் கணவன்-மனைவி இருவரும் நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர்.

Update: 2022-06-05 01:49 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் மகேந்திர கோயல். வக்கீலாக பணியாற்றி வந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.இவரது மனைவி சுபா மேத்தாவும் கீழ் கோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதன் மூலம் கணவன்-மனைவி இருவரும் ஒரே ஐகோர்ட்டில் நீதிபதிகளாக பணியாற்றும் அதிசயம் நடந்துள்ளது. ராஜஸ்தான் ஐகோர்ட்டில் இது முதல் முறை என்பது கூடுதல் தகவல் ஆகும். கணவன்-மனைவி இருவரும் ஒரே கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றும் நிகழ்வுகள் முன்பும் நிகழ்ந்துள்ளன.

அந்தவகையில் நீதிபதி தம்பதியான முரளி சங்கர் குப்புராஜூ-தமிழ்செல்வி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2020-ம் ஆண்டு பணி நியமனம் பெற்றனர். முன்னதாக பஞ்சாப் ஐகோர்ட்டில் விவேக் புரி-அர்ச்சனா புரி தம்பதி கடந்த 2019-ம் ஆண்டு ஒரே நாளில் பதவியேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்