முதலிரவு முதல்...! மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்

முதலிரவு முதல்...! மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்;

Update: 2022-12-12 10:06 GMT

போபால்

மத்திய பிரதேசம் குவாலியரின் மச்லி மண்டி பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் 25 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.அந்த வாலிபர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

திருமணத்தில் வாலிபர் புல்லட் கேட்டதாகவும், ஆனால் மணமகள் தரப்பில் பைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.ஆனால் திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் மீண்டும் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார்.

எனக்கு கார் வேண்டும் இல்லையேல் உன்னை விவகாரத்து செய்து விடுவேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

இதுமட்டுமின்றி, வரதட்சணை கேட்டு மனைவியை பலமுறை உடல் ரீதியாக தாக்கியுள்ளார். கணவன் எல்லா எல்லைகளையும் தாண்ட ஆரம்பித்ததும், அந்த பெண் குவாலியரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.பின்னர் வரதட்சணை குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் கணவர் ​​வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால், படுக்கையறையில் எடுக்கபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைரலாக்குவேன் என்று கணவர் மிரட்டத் தொடங்கினார்.

தேனிலவு முதல் படுக்கையறை வரை அனைத்தையும் அந்த வாலிபர் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த தம்பதியினர் படுக்கையறையில் எடுத்த அந்தரங்க வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.இந்த வீடியோக்கள் குறித்து பெண்ணுக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தெரிய வந்தது. மனைவியுடன் படுக்கையறையில் கணவர் இருந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலாக பரவியது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, அந்த பெண் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் போலீசிடம் கூறியதாவது;-

தனது கணவருக்கு வீடியோ எடுப்பதில் விருப்பம் அதிகம் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு என்னுடைய ஒவ்வொரு சிறிய, பெரிய விஷயத்தையும் வீடியோ எடுப்பது வழக்கம். நான் முதன் முதலாக மணப்பெண்ணாக வீட்டுக்குப் போனபோது நடந்த சடங்குகள் அனைத்தையும் வீடியோ எடுத்திருந்தார்.

இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் அவரது தனிப்பட்ட வீடியோக்களையும் அவர் செய்தார். சில படுக்கையறை வீடியோக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நான் மறுக்கும் போது யாரிடமும் காட்ட மாட்டேன் என கூறிவிடுவார். ஆனால் அவர் இதையெல்லாம் ஒரு சதித்திட்டத்துடன் தான் செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்