கணவன், மனைவி சுட்டுக்கொலை... உறவுக்கார சிறுவன் வெறிச்செயல்

உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update: 2024-07-18 05:32 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள தக்ரோகி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (வயது 62). இவரது மனைவி சரோஜ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ராஜேந்திர சிங் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும், அவரது மகனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர சிங்குக்கும் அவரது சகோதரிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர சிங் சகோதரியின் மகனான சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேந்திர சிங், அவரது மனைவி மற்றும் மகன் 3 பேரையும் சரமாரியாக சுட்டான்.

இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்