உத்தரகாண்ட்: கங்கை நதியில் குளித்த இந்திய ராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழப்பு !

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே கங்கை நதியில் குளித்த ராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2022-07-05 23:02 GMT

டேராடூன்,

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே கங்கை நதியில் குளித்த ராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். லக்ஷ்மன் ஜூலா அருகே பூல்சட்டி என்ற இடத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் கொண்ட குழுவில் ராணுவ வீரர் நிதுல் யாதவும் (25) சென்றுள்ளார்.

அப்போது திடீரென ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து. இதனால், ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தன்ர்.

ராணுவ வீரரான யாதவ், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள காந்தலா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் விடுப்பில் இருந்ததாகவும், ரிஷிகேஷ் பயணத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்