வீட்டில் புகுந்து திருட்டு; தொழிலாளி பிடிபட்டார்
உல்லால் அருகே வீட்டில் புகுந்து திருடில் ஈடுபட்ட தொழிலாளி பிடிபட்டார்.;
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் தாலுகா சோமேஷ்வர் பகுதியை சோ்ந்தவர் பிரசாந்த். அவர் கடந்த 7-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தார்.
அப்போது மர்மநபர் ஒருவர் பிரசாந்த்தின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 57 கிராம் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து பிரசாந்த் உல்லால் போலீசில் புகார் அளித்து இருந்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த திருட்டில் ஈடுபட்ட மஸ்திகட் பகுதியை சோ்ந்த மோவாஸ் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.