'அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை' - ஜனாதிபதி திரவுபதி முர்மு பக்ரீத் வாழ்த்து
தியாகம் மற்றும் தன்னலமற்ற சேவையை வழங்க பக்ரீத் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை என்று குறிப்பிட்டுள்ளார்.
தியாகம் மற்றும் மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் பாதையை பின்பற்ற இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது எனவும் இந்நாளில் சமுதாயத்திற்கு பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பரப்ப நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.