ஜாமியா மசூதி இடத்தில் இந்து கோவில்; தொல்லியல் ஆராய்ச்சி மையம் அறிக்கை

ஜாமியா மசூதி இடத்தில் இந்து கோவில் இருந்ததாக தொல்லியல் ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2022-06-08 21:28 GMT

மண்டியா: மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜாமியா மசூதி உள்ளது. அந்த மசூதி இருந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கான அடையாளங்கள் அங்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்து அமைப்பினர் மசூதிக்கு எதிராக போர் கொடி உயர்த்தி வருகின்றனர். மேலும் மசூதியை இடித்துவிட்டு இந்து கோவிலை கட்டவேண்டும் என்று போராடி வருகின்றனர்.


இந்நிலையில் டெல்லியில் உள்ள தொல்லியல் ஆராய்சி மையம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 'மைசூரு தொல்லியல் ஆராய்ச்சி புத்தகத்தில் ஜாமியா மசூதி இருந்த இடத்தில், முன்பு ஆஞ்சநேயர் கோவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திப்பு சுல்தான் காலத்தில் ஆஞ்சநேயர் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டு இருப்பதாகவும், 1912 ஆண்டு மசூதியின் கோபுரம் சீரமைக்கப்பட்டதாகவும்' கூறப்பட்டு இருப்பதாக தொல்லியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த தகவல் அறிந்த இந்து அமைப்பினர் மீண்டும் ஜாமியா மசூதிக்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்