இந்து அமைப்பு பிரமுகர் பிரேம்சிங்கை கத்தியால் குத்திய வழக்கு: கோர்ட்டில், முதல் தகவல் அறிக்கை தாக்கல்

இந்து அமைப்பு பிரமுகர் பிரேம்சிங்கை கத்தியால் குத்திய வழக்கில் கோர்ட்டில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2022-08-27 16:27 GMT

 சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் சிவமொக்கா டவுன் அமீர் அகமது சர்க்கிளில் ஒரு பிரிவினர் வீரசாவர்க்கரின் உருவப்படம் அடங்கிய பேனரை வைத்து சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.

அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பேனரை அகற்றியதால் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிவமொக்கா டவுன் பகுதியில் இந்து அமைப்பு பிரமுகரான பிரேம்சிங்கை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இவ்வழக்கில் ஏற்கனவே தன்வீர் அகமது, நதீம், அப்துல் ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஜபியுல்லா என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த நிலையில் கைதான 4 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி விரைவில் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்