மாநில மொழிகளுக்கு இந்தி போட்டி அல்ல - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

மாநில மொழிகளுக்கு இந்தி போட்டி அல்ல என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.;

Update: 2023-08-04 13:44 GMT

புதுடெல்லி,

அலுவல் மொழிகளுக்கான 38-வது நாடாளுமன்ற குழு கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற குழுவின் 12-வது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

இந்தி எந்த ஒரு மாநில மொழிக்கும் போட்டி அல்ல. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாடு வலிமை பெறும். எந்த விதமான எதிர்ப்புமின்றி அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இல்லாமல், நல்லிணக்கம், உந்து சக்தி மற்றும் முயற்சியின் மூலமாக நிகழ வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளை தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது, விரைவில் இந்த பாடங்கள் அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்